ஆடல்-பாடலுக்கு அனுமதிகோரி பொதுநல வழக்கு தொடர்ந்தால் கடும் அபராதம் விதிப்போம் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

ஆடல்-பாடலுக்கு அனுமதிகோரி பொதுநல வழக்கு தொடர்ந்தால் கடும் அபராதம் விதிப்போம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்

Update: 2023-06-07 20:02 GMT


கரூர் மாவட்டம் கடவூர் சிந்தாமணிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஆடல், பாடல், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி மனுதாரர் கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்றார். இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டால் அந்த மனுவை 7 நாட்களில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் இது போன்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்க நேரிடும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்