முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திரண்டு வரவேற்போம்

ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சரை திரண்டு வரவேற்போம் என்று முருகேசன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்்.

Update: 2023-08-13 18:45 GMT

பரமக்குடி, -

ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சரை திரண்டு வரவேற்போம் என்று முருகேசன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்்.

ஆலோசனை கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மறுநாள் 18-ந் தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். அதற்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடி ஏ.பி.ஷா.மகாலில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் ஏரிக் ஜீடு பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாநில தீர்மான குழு துணை தலைவர் திவாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆலோசனைகள் வழங்கி பேசினர். அதைத் தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பேசியதாவது:-

100 அடி உயர கொடி கம்பம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நென்மேனி அருள் நகரில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்.

பார்த்திபனூரில் இருந்து போகலூர் வரை சாலையின் இருபுறமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பூரண கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணாமலை, வக்கீல் கதிரவன், வக்கீல் குணசேகரன், பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, அயலக அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த்.நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குழந்தை ராணி துரைராஜ், கோவிந்தம்மாள் சந்திரன், கார்த்திக் பாண்டியன், சாந்தா சின்னாள், கனகராஜ், நகர் துணைச் செயலாளர் மும்மூர்த்தி, மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், பாக்யராஜ், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வேலவன், கலீல் ரகுமான். முத்து பழனி குமார், நகர் பொருளாளர் ஜானகிராமன், 33-வது வார்டு செயலாளர் வீரபாண்டியன், ராமபாண்டி, ஐ.டி. பிரிவு ஜோசப் குழந்தைராஜா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்