மதுக்கடைகளைஅகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நூதனமுறையில் மனு
பாம்பன் ஊராட்சியில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நூதனமுறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாம்பன் ஊராட்சியில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நூதனமுறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இலக்கியா தலைமையில் அக்கட்சியினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். கழுத்தில் காலி மதுபான பாட்டில்களை தொங்கவிட்டபடி வந்து அளித்த மனதில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றியம், பாம்பன் ஊராட்சியில் உள்ள 3 மதுக்கடைகளும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், மசூதி, தேவாலயம், ஆகியவை அருகில் உள்ளன. இந்த மதுக்கடைகளில் மதுவை குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறாகவும் மது போதையில் தகாத வார்த்தைகளையும் பேசியபடி தகராறில் ஈடுபடுகின்றனர். சில பேர் போதை உச்சத்தில் அரை நிர்வாணமாக படுத்து கிடக்கின்றனர்.
ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் மதுபான கடைகள் இல்லாததால் அப்பகுதியினரும் இங்கு வந்து குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவர்கள், முதியோர்கள் அந்த வழியில் செல்ல முடியவில்லை. இது சம்பந்தமாக பாம்பன் கிராமசபை கூட்டத்தில் கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆயிரம்பேர் கையெழுத்து போட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இருக்கும் 3 மதுபான கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.