நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-18 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பாக வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகிரி பகுதியில் கனிம வளங்களை கடத்திச் செல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர் சீனிவாசன், மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காளிராஜ், செல்வம், ராஜா, வினோத்குமார், குட்டித்துரை, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்