நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது

Update: 2022-06-12 16:48 GMT

நாம் தமிழர் கட்சி சார்பில் நடப்பு அரசியல் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கம்பம் பார்க் திடலில் நடைபெற்றது. இதற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் மதன்சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்