நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல, மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள் என்றும் கோவில்களின் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள் என்றும் கோவில்களின் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள், என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்கிற முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறியவேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும். இந்த நிகழ்ச்சியை நேரடியாக வந்து பார்க்க முடியாதவர்கள் இதை உணர வேண்டும்" என்றார்.