தமிழர்களை ஒன்றிணைத்து பா.ஜ.க.வில் இணைக்க உள்ளோம்

தமிழர்களை ஒன்றிணைத்து பா.ஜ.க.வில் இணைக்க உள்ளதாக நடிகை காயத்ரிரகுராம் கூறினார்.

Update: 2022-08-17 17:23 GMT

திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் கே.வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், நடிகர் மகா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் நித்திய லட்சுமி, மாநில துணைத்தலைவர் ரகு சுப்ரமணி, மாவட்ட செயலாளர் பிரவேஷ் ராகுல், கலை மற்றும் இலக்கிய அணி மாநில செயலாளர் ரவி நடராஜ் உள்பட பலர் பேசினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகை காயத்ரி ரகுராம் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை பாரதீய ஜனதா கட்சியில் இணைக்க உள்ளோம். வெளிநாட்டில் உள்ளவர்கள் வருங்காலத்தில் அங்கிருந்து ஓட்டு போடும் வசதியையும் மோடி அரசு ஏற்படுத்தி தரவுள்ளது. உலகம் முழுவதும் மோடி அரசுக்கு நல்ல பெயர் உள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் கம்போடியாவில் இரவு கிளப்புகளில் சிக்கி உள்ளார்கள். அவர்களை மீட்டு வர ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்