அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

திருப்பத்தூர் அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.

Update: 2023-07-04 19:14 GMT

திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் பி.கணேஷ்மல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பி.கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மூலம் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு குடிநீர் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் செயலாளர் கே.சி.எழிலரசன், ஆடிட்டர் ரவிக்குமார், குங்குமம் ஜி.குமரேசன், ஏலகிரி செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி குழு தலைவர் எ.அம்பிகா உள்பட பலர் பேசினார்கள். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன், எல்.ஆனந்தன், டி.வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கோபிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்