குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-24 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

திட்டச்சேரியை அடுத்த கொந்தகை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொந்தகை பஸ் நிறுத்தம் அருகில் மெயின் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த உடைப்பில் இருந்து அதிகபடியான குடிநீர் வெளியேறி சாலையில் ஓடி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

குழாயில் உடைப்பு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும். மேலும் இதுபோல் தொடர்ந்து உடைப்புகள் ஏற்படாதவாறு குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்