நந்தன் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து

ரூ.27 கோடியில் புனரமைக்கப்பட்ட நந்தன் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்

Update: 2022-11-26 18:45 GMT

செஞ்சி

நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.12½ கோடி, விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.27½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதன் மூலம் கால்வாய்களை புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் துறிஞ்சலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து கீரனூர் அணைக்கட்டு திறக்கப்பட்டது. இதில் இருந்து வெளியான தண்ணீர் மூலம் முதலாவதாக மாதப்பூண்டி, நல்லாண் பிள்ளை பெற்றாள் ஆகிய ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து சோகுப்பம், தேவதானம்பேட்டை ஆகிய ஏரிகளும் நிரம்பிய நிலையில் கணக்கண்குப்பம் ஏரிக்கும் நீர் வந்து கொண்டிருந்தது. இந்த ஏரி நிரம்பியதும் தொடர்ந்து பனமலை ஏரி வரை செல்லும். நந்தன் கால்வாய் மூலம் கணக்கன்குப்பம் ஏரிக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு நீர் வரத்து இருந்ததால் அதை கிராம மக்கள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று கணக்கன்குப்பம் ஏரிக்கு நந்தன் கால் வாயிலிருந்து தண்ணீர் வருவதை பார்வையிட்டு பூக்களைதூவி வரவேற்றார். அப்போது கலெக்டர் மோகன், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் சோபனா, ரமேஷ், உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர் விஜயராகவன், நீர்வள ஆதார அமைப்பு கன்னிகா ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஞானாம்பாள் பஞ்சமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுலோசனா ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்