திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-02-17 19:02 GMT

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 10, 11, 17,19, 20, 21 மற்றும் 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தலைமை நீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தலைமை நீரேற்றும் நிலையத்தில் இருந்து மரக்கடை மற்றும் விறகுப்பேட்டை பகுதியில் செல்லும் குடிநீர் வினியோக குழாயில் உடைப்பு ஏற்பட்டு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மேலகாசிப்பாளையம், கீழகாசிப்பாளையம், பந்தேகானத்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, பீரங்கிகுளத்தெரு, மணிமண்டபசாலை, பூலோகநாதர்கோவில்தெரு, கீழராணித்தெரு, ஜின்னாத்தெரு, மன்னார்பிள்ளைத்தெரு, பாலக்கரை பகுதியான மதுரைரோடு, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து, குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்