பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன தண்ணீரை திருடினால் மின்சாரம் துண்டிப்பு

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன தண்ணீரை திருடினால் மின்சாரம் துண்டிப்பு

Update: 2023-09-12 10:20 GMT

பல்லடம்,

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை, மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.பாசனதிட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் பயிர்களுக்கு ஒரு சுற்று உயிர் நீர் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் தண்ணீரை திருடினால் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும்.என

பல்லடம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்த் பாலதண்டபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அதில் பல்லடம் பகுதியில் 48 கிலோமீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் உள்ளது பாசன தண்ணீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வாய்க்கால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாசன தண்ணீர் கடை மடைப்பகுதியான வெள்ளகோவில், குண்டடம் பகுதிகளுக்கு பாசன தண்ணீர் முறையாக செல்லவும், தண்ணீர் திருட்டை தடுக்கவும் அந்தந்த பகுதி பாசன சபை தலைவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த பகுதியில் நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மற்றும் மின்வாரியம் இணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தண்ணீர் திருட்டு குற்றத்தை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்