குடிநீர் குழாய் சீரமைப்பு பணி:சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்து அபாயம்

குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக சாலையில் ேதாண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-02-21 18:45 GMT

கூடலூர் நகர பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, அலுவலர்களுடன் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் குழாய் வரும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீர் கலந்து வருகிறதா என தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலைகளை தோண்டி பார்வையிட்டார்.

இந்நிலையில் குழாய் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்