ராமநதி அணையில் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கடையம் ராமநதி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-05 13:04 GMT

கடையம்:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கடையம் ராமநதி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநதி அணை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உச்சநீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையானது சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

போதிய மழையில்லாததால் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து குறைந்து காணப்பட்டு, அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்திருந்தது.

நீர்மட்டம் உயர்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர தொடங்கியது.

அதாவது கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு 86 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து 5 கன அடி நீர்வெளியேற்றமும் காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்