பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு...!
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
தேனி,
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 130 அடிக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு முதல்போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்ட்டது. அமைச்சர் ஐ பெரியசாமி, பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்டார்.
இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.