தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Update: 2022-11-14 18:45 GMT

பென்னாகரம்:

தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல் மடுவு, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்