ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.8 லட்சம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.8 லட்சம் கனஅடியாக குறைந்தது.

Update: 2022-08-31 16:04 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.8 லட்சம் கனஅடியாக குறைந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகா, கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சேர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

சிலைகளை கரைக்க தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆலம்பாடி, ஊட்டமலை, நாகர்கோவில் மற்றும் கரையோர பகுதிகளில் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சிலைகளை கரைக்க வந்தவர்களை மடம் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்