தேன்கனிக்கோட்டை:
ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன், தளி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், சூளகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெலகொண்டபள்ளி, தளி, அரசகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் கேன் நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் பெறாமலும், பாதுகாப்பு இல்லாமலும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி வந்த 2 குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் 2 கம்பெனிகளில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்