கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது-5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்த நிலையிலும், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது.

Update: 2022-08-31 16:24 GMT

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறதுகிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணை

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரத்து 498 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 9 ஆயிரத்து 140 கனஅடியாக குறைந்தது.

தண்ணீர் வரத்து குறைந்தது

அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் அணையின் 8 மதகுகள் வழியாக சீறிபாய்ந்து செல்கிறது.

தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டாலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.

மேலும் செய்திகள்