குளத்தில் மூழ்கி காவலாளி சாவு
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி காவலாளி பரிதாபமாக பலியானார்.
தூத்துக்குடி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் வையப்பன் (வயது 75). இவர் கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.