வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்

வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-27 18:45 GMT

வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை). மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜீனு, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:- கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். சாத்தணி கிராமத்தில் தலித் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழப்பட்டது. வழங்கிய மொத்த பட்டாக்களில் 30 சதம் நில அளவை செய்யப்படவில்லை. நில அளவை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகையில் கழிவுநீர்

பயிர்க்காப்பீடு தனியாருக்கு வழங்குவதால் அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசே பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை பாம்கோவில் நடைபெற்றுள்ள ரூ.50 லட்சம் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகையாற்று பகுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆற்றுப்பகுதி முழுவதும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் நீரும், ஆற்றுப்பகுதியும் மாசடைந்துள்ளது.

ஆற்று நீரை கால்நடைகள் கூட குடிக்க முடிவதில்லை. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இறப்புச்சான்றிதழ், பிறப்புச்சான்றிதழ் வழங்குவது தொடர்பான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணையில் உள்ளன. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

பயிர் காப்பீடு

முன்னதாக வைகை ஆற்றுப்பகுதி தூர்வாரும் முயற்சிக்கு கலெக்டர் மற்றும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வறட்சி நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு பதிவு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத்தொகை ரூ.69 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெயர் பட்டியல் வந்தவுடன் இழப்பீடு வழங்கப்படும் என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்