கே.செட்டிக்குளத்தில் வாருகால் வசதி; கிராமமக்கள் கோரிக்கை
கே.செட்டிக்குளத்தில் வாருகால் வசதி; கிராமமக்கள் கோரிக்கை
திருச்சுழி
திருச்சுழி அருகே கே.செட்டிக்குளம் ஊராட்சியை சேர்ந்த செட்டிக்குளம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் செட்டிக்குளம் மேற்குதெருவில் மழைநீர் உட்பட தண்ணீர் செல்வதற்கு முறையான வாருகால் வசதியின்றி வீட்டிற்குள் புகுவதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் செட்டிக்குளம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தெருவில் ஓடிய மழைநீரானது முறையான வாருகால் வசதியின்றி வீட்டிற்குள் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கி வருவதால் அதன் காரணமாக கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் விரைவில் வாருகால் வசதி செய்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.