திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை வைப்பு

திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

Update: 2022-06-25 22:27 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் இறந்து விடுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் சத்தியமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு திம்பம் மலைப்பாதையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை ஒன்று புதிதாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், 'வனவிலங்குகள் நடமாடும் பகுதி கவனமாக செல்லவும். வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவும். வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம். போட்டோ மற்றும் செல்பி எடுக்க வேண்டாம்,' என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வாசகம் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்