கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

சூளகிரி அருகே 4 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-07 15:55 GMT

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காட்டில் இருந்து 4 யானைகள் தனியாக பிரிந்து, சூளகிரி அருகே கும்பளம் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. இதில் 3 யானைகள் ஒரு குழுவாகவும், ஒரு யானை தனியாகவும் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. காப்புக்காட்டையொட்டி உள்ள கிராமப்புறங்களில் யானைகள் சுற்றித்திரிவதால் கும்பளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு தனியே செல்லக்கூடாது, கால்நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்