இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டினால் அபராதம்நாமக்கல் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Update: 2023-07-22 19:00 GMT

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை கடை உரிமையாளர்கள் பொது இடங்கள், சாக்கடைகள், பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் முயற்சியால், நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து, தனியாருக்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அனைத்து கடைகளிலும் இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கரூர் சென்று நகராட்சி பணியாளர்கள் மூலம் அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக்கப்பட்டது.

எனவே இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள், தங்களுடைய கடைகளில் உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். இறைச்சி கழிவுகளை வாகனத்தில் ஒப்படைக்காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு இந்த இறைச்சி கழிவுகள் எடுத்து செல்லப்பட்டு, உரமாக மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்