வாரிசு திரைப்பட இயக்குனர் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வாரிசு திரைப்பட இயக்குனர் சாமி தரிசனம் ெசய்தார்.

Update: 2023-01-29 11:49 GMT

தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது.

இந்த படம் வெற்றி அடைந்ததையடுத்து திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபைலி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தனது மனைவி மற்றும் பட குழுவினருடன் வந்த அவர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நவக்கிரக சன்னதியில் தீபமேற்றி வழிபட்டார். சாமி தரிசனம் முடித்து வந்த அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களின் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் மிகுந்த கடமைப்பட்டு உள்ளேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தில் நிறுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அருணாசலேஸ்வரரின் ஆசியை பெற தனது குடும்பத்தினருடனும், படக்குழுவினருடனும் வந்துள்ளேன் என்றார்.

பின்னர் கோவிலில் இருந்தவர்களில் பலர் திரைப்பட இயக்குனருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்