வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

பனவடலிசத்திரம் அருகே வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-01 20:54 GMT

பனவடலிசத்திரம்:

மே தினத்தையொட்டி, மேலநீலிதநல்லூர் யூனியன் பட்டாடைகட்டி பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கிடையே அந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 4 பேர் தங்களுக்கு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முறையான அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி, கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், யூனியன் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்