வார்டு குழு கூட்டம்

தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-04 19:42 GMT

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி ஆணையாளர் கிறிஸ்டி, உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தச்சநல்லூர் மண்டல பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் பொது சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிவு நீரோடை கட்டித்தர வேண்டும். தார் சாலை அமைத்திட வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக மாநகராட்சி பகுதிகளில் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்