மன்னார்குடியில் வார்டு பகுதி சபை கூட்டம்
மன்னார்குடியில் வார்டு பகுதி சபை கூட்டம் நடந்தது.
மன்னார்குடி 18-வது வார்டு பகுதி சபை கூட்டம் வினோபாஜி தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மன்னார்குடி நகராட்சி மேலாளர் மீரா மன்சூர், 18-வது வார்டு பகுதியை சேர்ந்த தி.க. மாவட்ட தலைவர் சித்தார்த்தன், ராஜதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வார்டு பகுதிக்கு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், தேவைப்படும் பணிகள் குறித்தும் நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் கேட்டறிந்தார்.