புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்படுமா?

சீர்காழியில் அனைத்து அடிப்படை வசதியுடன் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர்.

Update: 2022-09-16 18:45 GMT

சீர்காழி;

சீர்காழியில் அனைத்து அடிப்படை வசதியுடன் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர்.

பழைய தாலுகா அலுவலகம்

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், சார் கருவூலம், கிளை சிறைச்சாலை, வட்ட வழங்கல் அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகம், பத்திரப்பதிவு துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அரசு இ-சேவை மையம், ஆதார் மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.இந்த தாலுகா அலுவலக கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், கட்டிடங்கள் சேதம் அடைந்ததாலும் தாலுகா அலுவலக கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேற்கூரையில் அட்டைகள் பெயர்ந்தன

தற்போது அந்த அலுவலக வளாகத்தில் கழிவறை வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறை, பொதுமக்கள் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் போதிய இடவசதி இல்லாததால் குறுகிய இடத்திலேயே தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, புள்ளியல் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இதன் காரணமாக பணி செய்யும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது செயல்படும் தனியார் திருமண மண்டபம் முறையாக பராமரிக்கப்படாததால் மேற்கூரையில் அமைக்கப்பட்ட அட்டைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது.புதிய கட்டிடம்

எனவே பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிதாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தாலுகா அலுவலக கட்டிடம், சார் கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகம் உள்ளிட்ட புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்