போக்சோவில் தேடப்பட்டு வந்த தொழிலாளி கைது

சாயல்குடி அருகே போக்சோவில் தேடப்பட்டு வந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-19 18:34 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே மடத்தாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 46). இவர் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி சாயல்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாரியூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே இவர் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சல்மோன், போஸ் ஆகியோர் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்