மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு பஸ் இயக்கப்படுமா?

கோட்டூர் பகுதியில் காலை நேரத்தில் அரசு பஸ்கள் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

Update: 2022-11-22 18:46 GMT

கோட்டூர்;

கோட்டூர் பகுதியில் காலை நேரத்தில் அரசு பஸ்கள் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

அரசு பஸ்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 86 குலமாணிக்கத்திற்கு கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீனம்பநல்லூர், களப்பால் வழியாக மன்னார்குடியில் இருந்து காலை மதியம் மாலை என 3 முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் காலையில் வந்து செல்லும் பஸ் குலமாணிக்கத்தில் 7.30 மணி அளவில் புறப்பட்டு மன்னார்குடிக்கு 9.45 மணிக்கு செல்கிறது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்த அரசு பஸ்ஸை 86 குலமாணிக்கத்திலிருந்து காலை 7:30 அளவில் புறப்பட்டு மன்னார்குடிக்கு 9 மணிக்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர முடியும்.

நடவடிக்கை

இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது:- குல மாணிக்கம், அப்பியன் திருவாசல், நடுவக்களப்பால், குறிச்சிமூளை , சீலத்தநல்லூர், மீனம்ப நல்லூர் காடுவாகொத்தமங்கலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதனால் இந்த அரசு பஸ்சை குலமாணிக்கத்தில் காலை 7.30 மணி அளவில் புறப்பட்டு காலை 9 மணிக்குள் மன்னார்குடி பஸ் நிலையம் சென்று அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து மன்னார்குடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பலமுறை நாங்கள் தகவல் கொடுத்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்