நெல்லை:
வைகாசி அஸ்தம் நட்சத்திரத்தில் சுவேதகேது மஹாராஜா, தனது மனைவியோடு தீர்த்த யாத்திரை வந்தபோது அவருடைய மனைவி இறந்து விட்டார். நெல்லை வந்தபோது அவரை நோக்கி ஏமகால தூதர்கள் வருவதை கண்டு நெல்லையப்பரிடம் (காலசம்ஹார மூர்த்தி) தனக்கு உயிர் பிச்சை வேண்டி சரணாகதி அடைகிறார். சுவாமி அவருக்கு மனம் இறங்கி, மரண பயம் போக்கி அருள் செய்த திருவிளையாடல் நடைபெற்ற தினம் இதுவாகும்.
இதையொட்டி நேற்று காலையில் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி- அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் செப்பு தேரில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.