மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்

சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-27 10:53 GMT

செய்யாறு பகுதியில் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்ட தனியார் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தில் செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடரும் தனியார் சீட்டு கம்பெனி மோசடிகளை ஆய்வு செய்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும்.

வந்தவாசி, செய்யாறு நகரங்களில் செயல்பட்டு வந்த தனியார் சீட்டு நிறுவனம் தீபாவளி, பொங்கல், திருமண சீர்வரிசை என ஏழை, எளிய மக்களிடம் வசூலித்த பல கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு தப்பியோடிய மோசடி நபர்களை கைது செய்ய வேண்டும்.

மோசடியில் ஈடுபட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

பணம் மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தனியார் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்