ரூ.3 கோடியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக காத்திருப்பு கூடம்- மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தகவல்

ரூ.3 கோடியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக காத்திருப்பு கூடம் கட்டப்படும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் என கூறினார்.

Update: 2022-06-09 19:46 GMT

தஞ்சாவூர்:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தஞ்சை மாநகராட்சி சார்பில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் ரூ.3 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார், நிலைய அலுவலர் டாக்டர் செல்வம், கவுன்சிலர் சர்மிளாமேரி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மேயர், நிருபர்களிடம் கூறுகையில், "தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காத்திருப்பு கூடம் கட்டப்படவுள்ளது. இதில் கழிவறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை ஆகியவை இருக்கும். " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்