சாயல்குடி
சாயல்குடியில் நடந்த வ.உ.சி. பிறந்த நாள் விழாவுக்கு இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சாயல்குடி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் நாகராஜன், செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் லட்சுமணன், நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வ.உ.சி. படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள், யாதவ இளைஞர் அணியினர், முக்குலத்தோர் உறவின்முறை நிர்வாகிகள், சத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மதிவேந்தன், அறக்கட்டளை செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். வ.உ.சி. படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் குணசேகரன், புதுக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், மனிதநேய மக்கள் கட்சி நகர் துணைத்தலைவர் செய்யது அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.