விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு ரூ.21 லட்சம் காணிக்கை வசூல்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக கோவிலில் 8 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜன், செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.20 லட்சத்து 92 ஆயிரத்தி 860 ரொக்கப்பணமும், 6 கிராம் தங்கமும், 1 கிலோ 409 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.