உறையூர் வெக்காளியம்மன் ரத வீதி உலா
உறையூர் வெக்காளியம்மன் ரத வீதி உலா நடைபெற்றது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், தைப்பூச விழா கடந்த 28-ந்தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினசரி வெக்காளியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் பிரகாரங்களை வலம் வந்தார். நேற்று வெக்காளியம்மன் ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிறிய ரதத்தில் வெக்காளியம்மன் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் ரதத்தை கோவிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் இழுத்து வந்து வழிபட்டனர்.