உறையூர் காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்

உறையூர் காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-02-18 20:45 GMT

உறையூர் காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள திருவீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் சோமாஸ்கந்தர், விசாலாட்சி உள்பட பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் மாலையில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி விடிய, விடிய 4 கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி மாலை பிச்சாண்டார் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்