"வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றன" - ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-24 05:11 GMT

ஈரோடு,

பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில்,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்