தூத்துக்குடியில்வாக்காளர் சேர்ப்பு பணியில் பா.ஜனதா கட்சியினர் தீவிரம்
தூத்துக்குடியில்வாக்காளர் சேர்ப்பு பணியில் பா.ஜனதா கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து எனது பூத் வலிமையான பூத் என்ற அடிப்படையில் பணியாற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார். இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 811 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடி முகவர் மற்றும் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த பணிகளை மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று நேரடியாக பார்வையிட்டனர். கட்சி நிர்வாகிகள் வாக்காளர் சேர்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தினர்.