நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் - வாக்களித்த பின் அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை,
அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
"அனைவரும் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். காரணம் இந்த ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர் பெருமக்கள் மட்டும்தான். வாக்காளர் பெருமக்கள்தான் இந்த நாடு எப்படி செல்ல வேண்டும்? நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். ஆளுபவருக்கும் நமக்கும் எப்போதும் தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும். சிந்தித்து எல்லோரும் வாக்களிப்போம். நான் எனது ஜனநாயக கடைமையை ஆற்றி விட்டேன். தமிழகத்தில் உள்ள அனைத்து அன்பு செல்வங்களுக்கும் வேண்டுகோள் எங்கிருந்தாலும் மாலை 7 மணிக்குள் வாக்காளியுங்கள். நல்ல ஒரு ஆட்சி அமைய உதவுங்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். பெரிய மாற்றத்தை கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.