முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி

ஆலங்குளம் அருகே முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடந்தது.

Update: 2023-02-24 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் நல்லூர் ஆலடிப்பட்டியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஆலடி மாணவர் பேரவை மைதானத்தில் நடைபெற்றது. ஆண்களுக்கான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர் ஆகிய பிரிவுகளின் நடைபெற்ற இந்த போட்டியினை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான பிரிவில் புல்லுகாட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசும், ஜிகே பாய்ஸ் அணி மூன்றாம் பரிசும் பெற்றது.

கல்லூரி இடையிலான போட்டியில் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல் பரிசும், வெய்க்காலிப்பட்டி செயிண்ட் ஜோசப் கல்லூரி இரண்டாம் பரிசும், கொடிக்குறிச்சி நல்லமணி யாதவா கல்லூரி மூன்றாம் பரிசும் பெற்றது.

பொது பிரிவினருக்கான போட்டியில் சிவகாமியாபுரம் காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசும், ஆலடிப்பட்டி ஆளடி மாணவர் பேரவை அணியினர் இரண்டாவது பரிசும், சுரண்டை காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி மூன்றாவது பரிசும் பெற்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, தென்காசி மாவட்ட கைப்பந்தாட்ட நடுவர்கள் குழு தலைவர் ஐசக் ஜான்சன் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கலான ஆலடி பேரவை உறுப்பினர்கள் குமாரவேல்ராஜா, செல்வம், முருகேசன், விஜயன், வினோத்குமார், தனோஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்