கைப்பந்து போட்டி

திருக்குறுங்குடியில் கைப்பந்து போட்டி நடந்தது.

Update: 2022-09-18 19:38 GMT

ஏர்வாடி:

களக்காடு புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருக்குறுங்குடி சூழல் சரகத்திற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி, திருக்குறுங்குடியில் நடந்தது. வனச்சரகர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி இசக்கித்தாய் ஞானசேகர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

போட்டியில் லெவிஞ்சிபுரம் அணி முதலிடமும், நம்பிதலைவன்பட்டயம் 'ஏ' அணி 2-வது இடமும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. வனவர்கள் அப்துல் ரஹ்மான், சிவகுமார், கிராம வனக்குழு தலைவர்கள் பொன்னி வளவன், கவிதா, கவுன்சிலர் சுகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்