தேனியில் கைப்பந்து போட்டி
தேனி மேரிமாதா பள்ளியில் மாண-மாணவிகளுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தேனி மேரி மாதா சி.எம்.ஐ. பப்ளிக் பள்ளியில் எம்.எஸ்.எஸ்.சி. ஸ்போர்ட்ஸ் அண்டு கேம்ஸ் அமைப்பு சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், 13 பள்ளிகளை சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் மேரி மாதா சி.பி.எஸ்.சி. பள்ளி முதல்வர் ராபின்ஸ் ஜேக்கப், மெட்ரிக் பள்ளி முதல்வர் சீனு எம்.ஜோசப், பள்ளியின் நிதி நிர்வாகி ஜோஜோ மேத்யூ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.