பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரியில் மாநில கைப்பந்து போட்டி-38 மாவட்ட அணிகள் பங்கேற்பு

Update: 2023-01-06 18:45 GMT

தர்மபுரி:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன.

மாநில கைப்பந்து போட்டி

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாணவிகளுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் 38 மாவட்ட அணிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் சேலம் மாவட்ட அணி முதலிடமும், சென்னை மாவட்ட அணி 2-வது இடமும், ஈரோடு மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்தன.

இந்தநிலையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின கைப்பந்து போட்டிகள் தர்மபுரி பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

நாக்அவுட் முறையில் போட்டி

இந்த போட்டிகளை முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை உடற்கல்வி ஆய்வாளர் பிரபு, நாகப்பட்டினம் உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், தர்மபுரி உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர். முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட அணிகளும், விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அணிகளும் மோதன. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் விளையாடின.

இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்