தொழில்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை மாவட்ட அளவில் தொழில்பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் நடந்தது

Update: 2022-12-12 18:45 GMT

மயிலாடுதுறை ஏழுமலையான் ஐ.டி.ஐ.யில் மாவட்ட தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மண்டல திறன் மேம்பாடு தொழில் முனைவோர் இயக்குனரகம் சார்பில் மாவட்ட அளவிலான தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாடு தொழில் முனைவோர் உதவி இயக்குனர் ராஜேந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதில் ஏழுமலையான் ஐ.டி.ஐ யின் முதல்வர் முருகானந்தம், மேலாளர் துரை.சரவணன், கேட்டரிங் கல்லூரி முதல்வர் வெங்கடேஷ்பாபு, கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ராக்கவ் தினேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி கலந்துகொண்டு பேசினார். முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தொழில்பழகுனரை தேர்ந்தெடுத்தனர். இறுதியில் ஏழுமலையான் தொழிற்பள்ளியின் முதல்வர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்