வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-05 14:59 GMT

தூத்துக்குடி, கோவில்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளருமான பெருமாள்சாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி. கொள்ளுபேத்தி

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் வசிக்கும் அவரது கொள்ளுப் பேத்தி செல்வி, அவரது திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அவரது கணவர் முருகானந்தம், மகன் கபிலாஸ் போஸ், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி, மாநில பொருளாளர் சுப்பாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செல்வி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தென்னகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் மறைக்கப் படுகிறது. மேலும் தியாகங்கள் மாற்றப்படுவதுடன் புறக்கணிக்கப்பட்டும் வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ. சி யின் வெண்கல சிலை நிறுவ வேண்டும். நாடாளுமன்ற நுழைவு வாயில் ஒன்றுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். வ.உ.சியின் பிறந்த தினமான செப்.5-ந் தேதியை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சைவவேளாளர் சங்கம்

கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு சங்கத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நேற்று காலையில் சிறப்பு விழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் துணை தலைவர் நடராஜன், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் பிரபு, இளைஞர் அணி கற்பூரராஜா, ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணி தலைமையில் நகர துணை செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர். மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கம்யூனிஸ்டு கட்சிகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சரோஜா, துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் மலர் மரியாதை செலுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகரச் செயலாளர் ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன், மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்த பாண்டி, துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், ரத்த தான கழக தலைவர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சாயர்புரம்

புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்