வழக்கு விசாரணையை பார்வையிட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்
சிவகிரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சட்டக்கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் அறிவுறுத்தலின்பேரில், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி அனுமதி பெற்று, சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பார்வையிட மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
நீதிமன்றங்களில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளை மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விவரங்கள் குறித்து நீதிமன்ற ஊழியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறினர். கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் ஆலோசனை வழங்கினார்.