ராமேசுவரத்திற்கு கோவா மாநில கவர்னர் வருகை
ராமேசுவரத்திற்கு கோவா மாநில கவர்னர் வருகை
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக கோவா மாநில கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை நேற்று இரவு ராமேசுவரம் வருகை தந்தார். ராமேசுவரம் வருகை தந்த அவரை மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் வரவேற்றார். தொடர்ந்து இரவு பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கிய கோவா மாநில கவர்னர் இன்று(புதன்கிழமை) காலை ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மேலும் தனுஷ்கோடி பகுதிக்கும் சென்று பார்வையிட உள்ளார்.